Mar 12, 2026
Thisaigal NewsYouTube
மகளை பிடிக்கவில்லை என்றால் திரும்ப கொடுத்துவிடு: திருமணத்தில் மாப்பிள்ளையிடம் கோரிக்கை வைத்த பாசமிகு அப்பா...!
உலகச் செய்திகள்

மகளை பிடிக்கவில்லை என்றால் திரும்ப கொடுத்துவிடு: திருமணத்தில் மாப்பிள்ளையிடம் கோரிக்கை வைத்த பாசமிகு அப்பா...!

Share:

என் மகளை நேசிப்பதை நிறுத்தினால், அவளை புண்படுத்தாதே, அவளை என்னிடம் திரும்ப கொடுத்துவிடு. அவளை ஒன்றும் செய்யாதே என்று கெஞ்சி கேட்கிறார்.

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே... அப்பாக்களுக்கு மகள்கள் எப்போதுமே தேவதைகள்தான். மகள்களுக்கு ஆண் தேவதை, தன்னுடைய அப்பா மட்டுமே.

சாதாரணமாக ஒரு வீட்டில் அம்மாவுக்கு மகன்களும், அப்பாவுக்கு மகள்களும் செல்லப்பிள்ளைகளாக இருப்பது வழக்கம் தான். இருந்தாலும், உலகில் மற்ற உறவுகளைவிட அப்பா - மகள் உறவு அதிகம் கொண்டாடப்படுகிறது.

அப்படிப்பட்ட மகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு இன்னொருவர் கையில் கொடுப்பது அப்பாக்களுக்கு மிகுந்த வேதனைதான்.

இந்தநிலையில், மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டு மருமகனின் கையை பிடித்து கொண்டு தந்தை கதறி அழும் வீடியோ மனதை உருக்குவதாக இருக்கிறது.

திருமணம் முடிந்தவுடன் மருமகனின் கையை பிடித்து கொண்டு அப்பெண்ணின் தந்தை அழுது கொண்டே, என்றாவது ஒரு நாள் உன் மனதில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், என் மகளை நேசிப்பதை நிறுத்தினால், அவளை புண்படுத்தாதே, அவளை என்னிடம் திரும்ப கொடுத்துவிடு. அவளை ஒன்றும் செய்யாதே என்று கெஞ்சி கேட்கிறார்.

''அதுபோல் நடக்காது'' என்று மருமகன் மாமனாருக்கு ஆறுதல் கூறுகிறார்.

என் அருமை மகள் இப்போது உன்னுடையவள் என்று மாமனார் தனது மகளின் கையை மருமகன் கையில் கொடுத்து உணர்ச்சி வசப்படுகிறார். இந்த நேரத்தில் மருமகன் மற்றும் மகள் என இருவரும் உணர்ச்சிவசப்பட, மாமனார் மற்றும் மருமகன் ஒருவரையொருவர் இறுக கட்டிப்பிடித்து உணர்ச்சிவசப்படுகின்றனர்.

Related News

ஈரான் போர்: இந்திய எண்ணெய் கப்பல் ஹார்முஸ் நீரிணை வழியாக மும்பையை வந்தடைந்தது

ஈரான் போர்: இந்திய எண்ணெய் கப்பல் ஹார்முஸ் நீரிணை வழியாக மும்பையை வந்தடைந்தது

நேரலையில் பேசிக்கொண்டிருந்த போதே மரணம்: சீன இன்ஃப்ளூயன்சரின் கடைசி நிமிடங்கள்!

நேரலையில் பேசிக்கொண்டிருந்த போதே மரணம்: சீன இன்ஃப்ளூயன்சரின் கடைசி நிமிடங்கள்!

பள்ளி மாணவி படுகொலை: குற்றவாளிகளைத் தூக்கிலிடக் கோரி மக்கள் போராட்டம் - பதற்றத்தில் விழுப்புரம்!

பள்ளி மாணவி படுகொலை: குற்றவாளிகளைத் தூக்கிலிடக் கோரி மக்கள் போராட்டம் - பதற்றத்தில் விழுப்புரம்!

தலைகீழ் மாற்றம்: விறகு அடுப்பிற்கு மாறும் ஓட்டல்கள்; மின்சார அடுப்பைத் தேடும் இல்லத்தரசிகள்!

தலைகீழ் மாற்றம்: விறகு அடுப்பிற்கு மாறும் ஓட்டல்கள்; மின்சார அடுப்பைத் தேடும் இல்லத்தரசிகள்!

"பருவநிலை மாற்றம்: சவால்களைப் புதிய பொருளாதார வாய்ப்புகளாக மாற்ற வேண்டும்" - அமைச்சர் இந்திராணி ராஜா

"பருவநிலை மாற்றம்: சவால்களைப் புதிய பொருளாதார வாய்ப்புகளாக மாற்ற வேண்டும்" - அமைச்சர் இந்திராணி ராஜா

ஏப்ரல் 1 முதல் சிங்கப்பூர் - பாத்தாம் படகு கட்டணம் உயர்வு: பயணிகள் அதிருப்தி!

ஏப்ரல் 1 முதல் சிங்கப்பூர் - பாத்தாம் படகு கட்டணம் உயர்வு: பயணிகள் அதிருப்தி!