Apr 19, 2026
Thisaigal NewsYouTube
எல்லா வேலையையும் AI செய்யும்,பொழுது போகாதவர்கள் தான் வேலை செய்வார்கள்! எலான் மஸ்க்
உலகச் செய்திகள்

எல்லா வேலையையும் AI செய்யும்,பொழுது போகாதவர்கள் தான் வேலை செய்வார்கள்! எலான் மஸ்க்

Share:

அமெரிக்கா, மே 28-

"நீங்கள் பொழுதுபோக்காக ஒரு வேலையைச் செய்ய விரும்பினால் செய்யலாம். ஆனால் AI ரோபோக்களே அனைத்தையும் செய்துவிடும்" என்று எலான் மஸ்க் கருதுகிறார்.

எதிர்காலத்தில் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் இயங்கும் ரோபோக்களே பெரும்பாலான வேலைகளைச் செய்துவிடும் என்பதால், மனிதர்கள் விரும்பினால் வேலைக்குச் செல்லலாம் என்ற நிலை உருவாகும் என எலான் மஸ்க் கூறியுள்ளார்.

விவா டெக்னாலஜி 2024 நிகழ்ச்சியில் பேசிய டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், எதிர்காலம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் தான் இயங்கும் என்பதற்கு மிகவும் சாத்தியமான சூழ்நிலை உள்ளது என்று தெரிவித்தார்.

"அநேகமாக நம்மில் யாருக்கும் வேலை இருக்காது" என்று கூறிய எலான் மஸ்க், "யாராவது எந்த வேலையையாவது செய்தால் அது அவர்கள் விருப்பமாகவே இருக்கும்" எனவும் குறிப்பிட்டார்.

அந்த சூழ்நிலையில், உலகம் முழுவதும் அனைவருக்கும் உயர் வருமானம் இருக்கும், அதே நேரத்தில் பொதுமக்களுக்கு வேண்டிய எந்த சேவையையும் AI ரோபோக்கள் வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

"நீங்கள் பொழுதுபோக்காக ஒரு வேலையைச் செய்ய விரும்பினால் செய்யலாம். ஆனால் AI ரோபோக்களே நீங்கள் விரும்பும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கிவிடும்" என்றும் எலான் மஸ்க் பேசினார்.

பணியாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் பணியை விரைவில் AI செய்யத் தொடங்கிவிடும் என்றும் எலான் மஸ்க் சொல்லியிருக்கிறார். AI தொழில்நுட்பம் 30 கோடி வேலைகளைக் குறைக்கக்கூடும் என கோல்ட்மேன் சாக்ஸ் கணித்துள்ளது. சர்வதேச செலாவணி நிதியம் பொருளாதாரத்தைப் பொறுத்து அதன் தாக்கம் வேறுபட்டதாக இருக்கும் என்று கூறியுள்ளது.

Related News

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு