Jun 17, 2026
Thisaigal NewsYouTube
தென் அமெரிக்காவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 7.5 ஆகப் பதிவு
உலகச் செய்திகள்

தென் அமெரிக்காவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 7.5 ஆகப் பதிவு

Share:

தென் அமெரிக்கா, ஆகஸ்ட்.22-

தென் அமெரிக்காவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆகப் பதிவாகியுள்ளது.

தென் அமெரிக்காவுக்கும், அண்டார்டிகாவுக்கும் இடையே உள்ள டிரேக் பாசேஜ் பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் சுமார் 10.8 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

முதலில் ரிக்டர் அளவுகோலில் 8 என்ற அளவில் மதிப்பிடப்பட்ட இந்த நிலநடுக்கம் பிறகு, 7.5 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக இதுவரையில் எந்தத் தகவலும் இல்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை