Sep 13, 2026
Thisaigal NewsYouTube
தெற்கு பிரான்ஸில் காட்டுத்தீ பரவல்: நீர்வீச்சு விமானங்கள் மூலம் தீயணைப்பு தீவிரம்
உலகச் செய்திகள்

தெற்கு பிரான்ஸில் காட்டுத்தீ பரவல்: நீர்வீச்சு விமானங்கள் மூலம் தீயணைப்பு தீவிரம்

Share:

தெற்கு பிரான்ஸின் வார் பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த நீர்வீச்சு விமானங்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வெறும் சில மணி நேரங்களில் 1,700 ஹெக்டேர் நிலப்பரப்பு தீயில் எரிந்து சாம்பலானதுடன், கோட்டிமாக் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சுமார் 400 பேர் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். அப்பகுதியில் நிலவும் கடுமையான வறட்சி மற்றும் வெப்ப அலை காரணமாகத் தீயின் வேகம் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்புப் பணியின் போது சில தீயணைப்பு வீரர்களும் பொதுமக்களும் சிறிய அளவிலான புகை உபாதைக்கு ஆளாகியுள்ளனர். கடுமையான வறட்சி காரணமாக இந்த ஆண்டு பிரான்ஸில் காட்டுத்தீ சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related News