Jun 18, 2026
Thisaigal NewsYouTube
‛‛மர்மதேசம்’’யாருக்கும் தெரியாத நிலவின் மறுபக்கம்! தைரியமாக தரையிறங்கி மண்ணை அள்ளிவந்த சீன ரோபோ!
உலகச் செய்திகள்

‛‛மர்மதேசம்’’யாருக்கும் தெரியாத நிலவின் மறுபக்கம்! தைரியமாக தரையிறங்கி மண்ணை அள்ளிவந்த சீன ரோபோ!

Share:

பெய்ஜிங், ஜூன் 26-

நிலவின் மறுபக்கத்தில் (இருண்ட பக்கம்) தரையிறங்கியிருந்த சீனாவின் விண்கலம் அங்கிருந்து மணல் துகள்களை சேகரித்துக்கொண்டு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளது. இது விண்வெளி துறையில் மனித குல சாதனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

பூமிக்கு இயற்கையாகவே அமைந்த துணை கோள்தான் நிலவு. ஆதி காலத்தில் நாட்களை அறிந்துக்கொள்ள மனிதன் நிலவை காலண்டராக பயன்படுத்தி வந்தான். மட்டுமல்லாது, பூமியில் இருக்கும் கடல் அலையை சீராக வைத்திருப்பதிலும், பூமியின் சுழற்சியை கட்டுப்படுத்துவதிலும் நிலவு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே நிலவு குறித்த ஆய்வுகளுக்கு விஞ்ஞானிகள் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.

சர்வதேச நாடுகள் மத்தியில் நிலவு குறித்த ஆய்வுக்கான ஆர்வத்தை தூண்டியதில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. சந்திரயான் திட்டம் உலக நாடுகளின் கவனைத்தை நிலவு பக்கம் திருப்பியது. யாருமே இதுவரை இறங்காத நிலவின் தென் துருவத்தில் விண்கலனை இறக்கி இந்தியா உலக சாதனையை படைத்தது. இதனையடுத்து நிலவு மீது ரஷ்யாவும், ஜப்பானும் அடுத்தடுத்து விண்கலன்களை அனுப்பின. ஆனால், இரண்டும் தோல்வியடைந்தது.

மறுபுறம் சீனா, நிலவு குறித்த மிகப்பெரிய திட்டத்தை கையில் எடுத்திருந்தது. அதாவது, நிலவின் மற்றொரு பகுதியில் விண்கலத்தை தரையிறக்கி, அங்கிருந்து மண்ணை பூமிக்கு கொண்டுவருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.

இந்த மிஷன் ஒட்டுமொத்தமாக 53 நாட்கள் நடந்திருக்கிறது. நிலவை பொறுத்தவரை சீனாவுக்கு இது 6வது பயணமாகும். 6வது பயணத்திலேயே இப்படியொரு சாதனையை சீனா படைத்திருப்பது சர்வதேச விண்வெளி உலகில் பேசுபொருளாகியுள்ளது. அதேபோல, சீனாவின் இந்த வெற்றி அமெரிக்காவை தூண்டிவிட்டிருக்கிறது.

Related News

மகனின் உடலை எழுப்ப முயன்ற தந்தையின் நெஞ்சையுருக்கும் பாசம்

மகனின் உடலை எழுப்ப முயன்ற தந்தையின் நெஞ்சையுருக்கும் பாசம்

உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்க்கச் சீனா விடுத்த அழைப்புக்குத் தைவான் கடும் எதிர்ப்பு

உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்க்கச் சீனா விடுத்த அழைப்புக்குத் தைவான் கடும் எதிர்ப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்