Oct 11, 2026
Thisaigal NewsYouTube

கோவாவில் கூட்ட நெரிசலில் சிக்கி எழுவர் பலி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கோவாவில் கூட்ட நெரிசலில் சிக்கி எழுவர் பலி

பனாஜி, மே.03-

கோவாவில் கோவில் திருவிழாவொன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவா முதல்வர் பிரமோத் வடக்கு கோவா மாவட்ட மருத்துவமனைக்குச் சென்று காயம் அடைந்தவர்களை நேரில் சென்று சந்தித்தார். கூட்ட நெரிசலுக்கான காரணம் குறித்து பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவில் விழாவில் மக்கள் அனைவரும் ஒன்று கூடி தரிசனம் செய்து கொண்டிருந்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →