Jun 17, 2026
Thisaigal NewsYouTube
ஆப்கானிஸ்தானில் ஓட்டுனர் தூங்கியதால் பஸ் கவிழ்ந்து 26 பேர் பலி
உலகச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் ஓட்டுனர் தூங்கியதால் பஸ் கவிழ்ந்து 26 பேர் பலி

Share:

காபூல், ஆகஸ்ட்.28-

ஆப்கானிஸ்தானில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதில் பயணித்த 26 பேர் பலியாகினர். 14 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மத்திய ஆசிய நாடான ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரிலிருந்து தலைநகர் காபூல் நோக்கி சென்ற பேருந்து விபத்தில் சிக்கியது.

பேருந்து அதிவேகமாகச் சென்றதும், ஓட்டுனர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததும் விபத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பேருந்து உருண்டதில் 26 பயணிகள் பலியாகினர். மேலும், 14 பேர் காயமடைந்தனர்.

அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அண்மையில் நடந்த விபத்தில், ஈரானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பிய புலம் பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்ததில், 81 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை