Oct 18, 2025
Thisaigal NewsYouTube
விண்வெளி பந்தயத்தில் இந்தியாவுக்கு சிறப்பான இடம்: அமெரிக்க பத்திரிகை பாராட்டு
உலகச் செய்திகள்

விண்வெளி பந்தயத்தில் இந்தியாவுக்கு சிறப்பான இடம்: அமெரிக்க பத்திரிகை பாராட்டு

Share:

விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிகளில் இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ பல மைல்கல் சாதனைகளை படைத்து வருகிறது. விண்வெளி திட்டங்களில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியா முன்னேறி வருகிறது.

சமீபத்தில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேசிய பிறகு விண்வெளி ஒத்துழைப்பின் அனைத்து துறைகளிலும் புதிய எல்லைகளை அடைய இருநாட்டு தலைவர்களும் உறுதிபூண்டு அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த நிலையில் அமெரிக்காவின் பிரபல நாளிதழான நியூயார்க் டைம்ஸ் இந்தியாவின் விண்வெளி திட்டங்களை வெகுவாக பாராட்டி கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. 'உலகின் விண்வெளி வணிகத்தில் வியக்க வைக்கும் முயற்சியாளர்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது.

1963-ல் தனது முதல் ராக்கெட்டை ஏவியபோது, உலகின் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பின்பற்றும் ஏழை நாடாக இந்தியா இருந்தது.

இந்தியாவின் முதல் ராக்கெட் ஒரு சைக்கிள் கேரியரில் வைத்து எடுத்து சென்று விண்ணில் ஏவப்பட்டது.

இன்றைய விண்வெளிப் பந்தயத்தில் இந்தியா மிகவும் உறுதியான இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியா குறைந்தது 140 பதிவு செய்யப்பட்ட விண்வெளி-தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் தாயகமாக மாறியுள்ளது.

Related News