Jun 17, 2026
Thisaigal NewsYouTube
இந்தோனேசியாவில் 280 பேருடன் சென்ற கப்பலில் தீ: மூவர் பலி
உலகச் செய்திகள்

இந்தோனேசியாவில் 280 பேருடன் சென்ற கப்பலில் தீ: மூவர் பலி

Share:

ஜகார்த்தா, ஜூலை.20-

இந்தோனேசியாவில் 280க்கும் மேற்பட்டோருடன் சென்ற சொகுசுக் கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.

இந்தோனேசியாவில் பல தீவுகள் உள்ளன. அதில், மனாடோ-தஹுடா தீவுகளுக்கு இடையே கே எம் பார்சிலோனா விஏ என்ற சொகுசுக் கப்பல் இயக்கப்படுகிறது. இது அருகில் உள்ள தீவுகளுக்கும் சென்று வருகிறது.

மனோடாவில் இருந்து தஹூடா நோக்கி 280க்கும் மேற்பட்டோருடன் இந்தக் கப்பல் சென்று கொண்டு இருந்தது. திடீரென இந்தக் கப்பலில் தீப்பற்றி எரிந்தது. அதைத் தொடர்ந்து கப்பலில் இருந்த ஏராளமானோர் உயிர் தப்ப கடலில் குதித்தனர். தகவல் அறிந்த மீட்புப் படையினர், பேரிடர் கால மீட்புக் குழுவினர் உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து காரணமாக கப்பலில் எழுந்த புகை விண்ணை முட்டும் அளவுக்கு இருந்தது.

இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த வேளை 150க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். மற்றவர்களை மீட்கும் பணி துரிதமாக மேற்கொள்ளப்படுகிறது.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை