Jun 17, 2026
Thisaigal NewsYouTube
‘ஆப்பரேஷன் சிந்து' நடவடிக்கை: 1,713 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு
உலகச் செய்திகள்

‘ஆப்பரேஷன் சிந்து' நடவடிக்கை: 1,713 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு

Share:

புதுடெல்லி, ஜூன்.23-

அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஈரான் மீது, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானும் பதில் தாக்குதல் நடத்துகிறது. அப்பகுதிகளில் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இச்சூழலில், ஈரானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க, 'ஆப்பரேஷன் சிந்து' நடவடிக்கையை இந்திய மத்திய அரசு எடுத்துள்ளது.

இதற்கான பணிகளை ஈரான், அர்மேனியா மற்றும் துர்க்மெனிஸ்தான் நாடுகளில் உள்ள இந்தியத் துாதரகங்கள் மேற்கொண்டுள்ளன. முதற்கட்டமாக, ஈரானில் இருந்து 110 இந்திய மாணவர்கள் கடந்த 19ல், டில்லி வந்தடைந்தனர். இதைத் தொடர்ந்து, ஈரானின் டெஹ்ரானில் இருந்து மாணவர்கள் மற்றும் புனித யாத்திரை சென்றவர்கள் என மொத்தம் 600 இந்தியர்களை அழைத்து வர, மத்திய அரசு ஏற்பாடு செய்தது.

எனினும், போர் சூழல் காரணமாக அங்குள்ள வான்பரப்பு மூடப்பட்டுள்ளது. ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக அனுப்ப, தங்கள் வான் எல்லையை பயன்படுத்த ஈரான் அரசு சிறப்பு அனுமதி அளித்தது. இதையடுத்து, இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தாத மஷாத் நகருக்கு, அழைத்து வரப்பட்ட 600 பேரும், இரண்டு தனி விமானங்கள் வாயிலாக டில்லிக்கு வந்தனர்.

இதேபோல் துர்க்மெனிஸ்தானின் தலைநகர் அஸ்காபாத், ஈரானின் மஷாத் ஆகிய இடங்களில் இருந்து புறப்பட்ட இரண்டு தனி விமானங்கள் வாயிலாக, மேலும் 601 பேர் டில்லிக்கு அழைத்து வரப்பட்டனர். 285 இந்தியர்கள் டில்லி விமானம் நிலையம் வந்தடைந்தனர். இதன்படி, 'ஆப்பரேஷன் சிந்து' வாயிலாக இதுவரை, 1,713 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே இஸ்ரேலில் சிக்கி தவித்த 160 இந்தியர்கள் அதன் அண்டை நாடான ஜோர்டான் எல்லைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் தனி விமானம் வாயிலாக இன்று நாடு திரும்புவர்.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை