Sep 13, 2026
Thisaigal NewsYouTube
தமிழகத்தின் புதிய சூரியன்: கோட்டையில் கொடியேற்றிய தளபதி! எம்.ஜி.ஆருக்குப் பின் சரித்திரம் படைத்த  விஜய்
உலகச் செய்திகள்

தமிழகத்தின் புதிய சூரியன்: கோட்டையில் கொடியேற்றிய தளபதி! எம்.ஜி.ஆருக்குப் பின் சரித்திரம் படைத்த விஜய்

Share:

தமிழகம், மே.10-

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது! "சி. ஜோசப் விஜய் எனும் நான்..." என கம்பீரமான குரலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராக உறுதிமொழி ஏற்க, சென்னை மெரினா கடற்கரையே அதிரும் வகையில் தொண்டர்களின் முழக்கம் விண்ணைத் தொட்டது.

சென்னை நேரு உள் அரங்கில் தமிழக ஆளுநர் Rajendra Vishwanath Arlekar முன்னிலையில் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவில், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் தளபதி விஜய், தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்குப் பிறகு, தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிகப்படியான தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்த திரைத்துறை நாயகன் விஜய், இன்று மக்களின் சேவகனாக அரியணையில் அமர்ந்திருக்கிறார்.

விழா மேடையைச் சுற்றித் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் மல்க, "எங்கள் தளபதி... இனி தமிழகத்தின் முதல்வர்!" என்ற கோஷம் எதிரொலித்தது.

தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி மக்கள் இந்த மாற்றத்தைக் கொண்டாடி வருகின்றனர். வெள்ளித்திரை நாயகனாக கோடிக்கணக்கான இதயங்களை வென்றவர், இன்று கோட்டையில் அமர்ந்து புதிய தமிழகத்தைப் படைக்கத் தயாராகி விட்டார். அரசியலில் இது வெறும் பதவியேற்பு அல்ல, தமிழகத்தின் புதிய விடியல் என்று தவெக ஆதரவாளர்கள் வர்ணத்தனர்.

Related News

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை