Sep 13, 2026
Thisaigal NewsYouTube
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு: விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் – விழா திடீர் ஒத்திவைப்பு
உலகச் செய்திகள்

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு: விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் – விழா திடீர் ஒத்திவைப்பு

Share:

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதில் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்கள் காரணமாக, இன்று மே 7 ஆம் தேதி நடைபெறவிருந்த பதவியேற்பு விழா காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ல நடைபெற்று முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், 108 இடங்களைக் கைப்பற்றி தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், ஆட்சியமைக்கத் தேவையான மேஜிக் எண்ணான 118-ஐ எட்டாததால், ஆட்சியமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகரைச் சந்தித்த விஜய், ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆனால், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் கடிதங்கள் முழுமையாகச் சமர்ப்பிக்கப்படாததால், பதவியேற்பு விழாவிற்கு அனுமதி வழங்க ஆளுநர் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதன் விளைவாகவே இன்றைய பதவியேற்பு நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

பதவியேற்பு விழா ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் இல்லம் மற்றும் பனையூரில் உள்ள ‘தவெக’ தலைமையகத்திற்கு வழங்கப்பட்டிருந்த கூடுதல் போலீஸ் பாதுகாப்பு மற்றும் சாலைத் தடுப்புகள் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Related News

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை