எட்டு வெவ்வேறு ஆண்களை ஏமாற்றி ஒரே குழந்தைக்கு 12 ஆண்டுகளாக குழந்தை பராமரிப்பு உதவித்தொகை பெற்று வந்த 35 வயதுடைய நான்சி முதாவ் என்ற பெண் தென்னாப்பிரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இந்த மோசடியைச் செய்துள்ள அவர், அந்தப் பணத்தைக் கொண்டு ஒரு வீடும் ஒரு உணவகமும் கட்டியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட ஆண்கள் யாரும் இதுவரை இந்த ஏமாற்று வேலை குறித்து சந்தேகிக்காத நிலையில், தற்பொழுது போலீசார் இந்த விவகாரத்தைக் கண்டறிந்து அவரைக் கைது செய்துள்ளனர். அந்தப் பெண்ணின் மீது மோசடி, ஆவண மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, குழந்தையின் உண்மையான தந்தை யார் என்பதைக் கண்டறிய டிஎன்ஏ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related News

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை

மெக்சிகோவில் பட்டாசு வெடிவிபத்து: 10 பேர் பலி; 60 பேர் காயம்


