Oct 13, 2026
Thisaigal NewsYouTube

பாகிஸ்தானில் பஸ்சில் குண்டுவெடிப்பு; பாதுகாப்பு படையினர் 90 பேர் பரிதாப பலி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாகிஸ்தானில் பஸ்சில் குண்டுவெடிப்பு; பாதுகாப்பு படையினர் 90 பேர் பரிதாப பலி

இஸ்லாமாபாத், மார்ச்.16-

பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினர் சென்ற பஸ்சில் குண்டு வெடித்ததில், 90 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயம் அடைந்தனர். பலூசிஸ்தான் விடுதலை படை இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள நுஷ்கி என்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த பஸ்சில் குண்டு வெடித்தது. இதில் சம்பவ இடத்திலேயே, 90 பேர் மரணமடைந்தனர். மேலும் பல பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பலுசிஸ்தான் முதல்வர் சர்ப்ராஸ் புக்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பலூசிஸ்தான் விடுதலை படை இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. அண்மையில், பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டாவில் இருந்து, கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட, 450 பயணிகளை பயங்கரவாதிகள் சிறைபிடித்தனர்.

அதன்பிறகு, பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொன்று விட்டு, மக்களை அந்நாட்டு ராணுவத்தினர் மீட்டனர். இந்த சம்பவம் நடந்து பரபரப்பு ஓயவில்லை. அதற்குள் தற்போது மீண்டும் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் அரங்கேறி உள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →