Jun 17, 2026
Thisaigal NewsYouTube
அயர்லாந்தில் பயங்கர துப்பாக்கிச் சூடு; 2 பேர் உயிரிழப்பு
உலகச் செய்திகள்

அயர்லாந்தில் பயங்கர துப்பாக்கிச் சூடு; 2 பேர் உயிரிழப்பு

Share:

லண்டன், ஜூலை.23-

வடக்கு அயர்லாந்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். வடக்கு அயர்லாந்தில் உள்ள மாகுயர்ஸ்பிரிட்ஜ் கிராமத்தில் நடந்த, துப்பாக்கிச் சூட்டில் அவ்விருவரும் கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபரைப் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

கிராமத்தில் அமைதியான பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இச்சம்பவத்தால் அந்த கிராம மக்கள் அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை