Oct 18, 2025
Thisaigal NewsYouTube
'டைட்டன்' நீர்மூழ்கியின் சிதைவுகளுடன் மனித உடல் பாகங்கள் மீட்பு: கரைக்கு கொண்டு வந்து ஆய்வு
உலகச் செய்திகள்

'டைட்டன்' நீர்மூழ்கியின் சிதைவுகளுடன் மனித உடல் பாகங்கள் மீட்பு: கரைக்கு கொண்டு வந்து ஆய்வு

Share:

மூழ்கிய டைட்டானிக் கப்பலை காண 'டைட்டன்' நீர்மூழ்கியில் சென்ற 5 கோடீசுவரர்கள், நீர்மூழ்கி வெடித்ததால் பலியானார்கள். அந்த நீர்மூழ்கியின் சிதைவுகளுடன் மனித உடல் பாகங்கள் என கருதப்படும் பகுதிகளும் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

கடந்த 1912-ம் ஆண்டு வடக்கு அட்லாண்டிக் கடலில் 'டைட்டானிக்' கப்பல் விபத்துக்குள்ளாகி மூழ்கியது. அதன் சிதைந்த பாகங்களை பார்க்கும் ஆர்வத்தில், 5 கோடீசுவரர்கள் கடந்த 18-ந் தேதி ஆழ்கடல் பயணம் மேற்கொண்டனர். ஓஷன்கேட் எக்ஸ்பெடிஷன்ஸ் நிறுவனம் வடிவமைத்த 'டைட்டன்' நீர்மூழ்கியில் அவர்கள் பயணித்தனர்.

அவர்களை பற்றி 4 நாட்களாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. டைட்டானிக் கப்பல் அருகே நீர்மூழ்கி வெடித்து சிதறி 5 பேரும் பலியாகி விட்டதாக அதிகாரிகள் 22-ந் தேதி அறிவித்தனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related News