கராச்சி, ஜனவரி.22-
பாகிஸ்தானின் கராச்சி நகரில் எம்.ஏ. ஜின்னா சாலையில் குல் பிளாசா என்ற பெயரில் வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது. அதி கடந்த சனிக்கிழமை இரவு திடீரென இதில் தீ விபத்து ஏற்பட்டது. குல் பிளாசாவில் மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை செய்யப்படும் கடைகள் உள்பட கட்டிடத்தின் 3 தளங்களிலும் தீ பரவியது. இந்த தீ விபத்தில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
துபாய் கிராக்கரி என்ற பெயரிடப்பட்ட ஒரு கடையில் இருந்து மட்டுமே 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. தவிர 3 உடல்கள் மீட்கப்பட்டன. இதனால், பலி எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்து உள்ளதாக அண்மைய தகவல் கூறுகிறது. எனினும், மரபணு பரிசோதனை அறிக்கைகளின் முடிவிலேயே இறுதியான விவரங்கள் உறுதிப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கடையில் ஏற்பட்ட மின் கசிவால் தீ பிடித்து, அது மளமளவென பல்வேறு கடைகளுக்கும் பரவியுள்ளதாகக் கூறப்படுகிறது.
வெடிகுண்டு செயலிழப்பு குழுவினரின் முதல்கட்ட விசாரணை அடிப்படையில், வெடிகுண்டு தாக்குதலுக்கான தொடர்பு தெரிய வரவில்லை. அதற்கான சான்றுகள் எதுவும் கிடைக்க பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








