Sep 13, 2026
Thisaigal NewsYouTube
தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம்: போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டு வீசி காவல்துறை தடியடி
உலகச் செய்திகள்

தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம்: போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டு வீசி காவல்துறை தடியடி

Share:

இந்தியத் தலைநகர் புதுதில்லியில் முக்கியத் தேர்வுகளில் ஏற்பட்ட முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றனர்.

மழை மற்றும் காவல்துறையின் கடுமையான தடுப்புவேலி தடைகளையும் மீறி ஜந்தர் மந்தர் பகுதியில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க முயன்ற காவல்துறையினர், அவர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் விரட்டியடித்தனர்.

தேசிய அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய இந்தத் தாக்குதல் வன்முறையாக மாறியுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related News