Oct 12, 2026
Thisaigal NewsYouTube

பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்கள் முடக்கம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்கள் முடக்கம்

புதுடெல்லி, ஏப்ரல்.28-

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களை முடக்கம் செய்துள்ளது இந்திய மத்திய உள்துறை அமைச்சு.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தான் அரசின் எக்ஸ் சமூக வளைத்தளப் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படும் 16 யூடியூப் சேனல்களும் முடக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் பாகிஸ்தானைச் சேர்ந்த தனி நபர்கள் மற்றும் செய்தி நிறுவனங்களால் நடத்தப்படும் சேனல்கள் ஆகும். ஜம்மு காஷ்மீரில் நடந்த துயரமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆத்திரமூட்டும் வகையில் தவறான கருத்துகளை வெளியிட்டதால் முடக்கம் செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →