Oct 12, 2026
Thisaigal NewsYouTube

காங்கோ படகுத் தீ விபத்து - பலி எண்ணிக்கை 148 ஆக உயர்வு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
காங்கோ படகுத் தீ விபத்து - பலி எண்ணிக்கை 148 ஆக உயர்வு

கின்சாசா, ஏப்ரல்.19-

காங்கோவில் ஆற்றில் சென்ற மரப்படகு தீப்பிடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது. காங்கோவில் உள்ள ஆறுகளில் படகு போக்குவரத்து முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அங்கு வசிக்கும் மக்கள் படகு போக்குவரத்தை விரும்புகின்றனர். வடமேற்கு காங்கோவில் உள்ள மடான் குமு துறைமுகத்தில் இருந்து போலோம்பா பகுதிக்கு ஒரு மோட்டார் படகில் 500க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டனர்.

பன்டாக்கா பகுதியில் படகு சென்று கொண்டிருந்த போது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. படகில் பயணம் செய்தவர்கள் தீ விபத்தில் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்தனர். இதில் படகு ஆற்றில் கவிழ்ந்தது. அதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100 பேர் காணாமல் போயிருக்கி.

அவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என மீட்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. விபத்தில் இருந்து தப்பிய 100 பேர் உள்ளூர் டவுன் ஹாலில் உள்ள ஒரு தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →
மலேசியா–ஜோர்டான் உறவு மேலும் வலுப்பெறும்: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் நம்பிக்கை

மலேசியா–ஜோர்டான் உறவு மேலும் வலுப்பெறும்: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் நம்பிக்கை

ரியாத் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல் -  ஒருவர் பலி, 11 பேர் காயம்

ரியாத் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல் - ஒருவர் பலி, 11 பேர் காயம்

எகிப்து வருமாறு மாமன்னர், பிரதமருக்கு அதிபர் அப்டேல் ஃபாத்தா எல்-சிசி அழைப்பு

எகிப்து வருமாறு மாமன்னர், பிரதமருக்கு அதிபர் அப்டேல் ஃபாத்தா எல்-சிசி அழைப்பு

எகிப்து அதிபருக்கு மலேசியாவில் அரச மரியாதை: 21 பீரங்கி குண்டுகள் முழங்க பிரம்மாண்ட வரவேற்பு

எகிப்து அதிபருக்கு மலேசியாவில் அரச மரியாதை: 21 பீரங்கி குண்டுகள் முழங்க பிரம்மாண்ட வரவேற்பு

மியன்மாரில் நீடித்த அமைதிக்கு மலேசியா துணை நிற்கும்: பிரதமர் அன்வார் உறுதி

மியன்மாரில் நீடித்த அமைதிக்கு மலேசியா துணை நிற்கும்: பிரதமர் அன்வார் உறுதி

அன்வார், மியன்மார் அதிபர் மின் ஆங் லாயிங் சந்திப்பு - மலேசியாவிலுள்ள மியன்மார் நாட்டவர்கள் குறித்து பேச்சுவார்த்தை

அன்வார், மியன்மார் அதிபர் மின் ஆங் லாயிங் சந்திப்பு - மலேசியாவிலுள்ள மியன்மார் நாட்டவர்கள் குறித்து பேச்சுவார்த்தை