Oct 11, 2026
Thisaigal NewsYouTube

சீனாவில் சுற்றுலா படகுகள் கவிழ்ந்து 10 பேர் பலி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சீனாவில் சுற்றுலா படகுகள் கவிழ்ந்து 10 பேர் பலி

பெய்ஜிங், மே.05-

சீனாவின் குய்சோவு மாகாணத்தில் 4 சுற்றுலா படகுகள் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காற்று வீசியதால் படகுகள் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக நம்பப்படுகிறது. படகில் பயணம் செய்த 84 பேர் நீரில் மூழ்கினர். இந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக மாண்டனர். மேலும் 70 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மே 1-5 வரை சீனாவின் மே தின விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஒரே படகில் அதிகமானவர்கள் பயணம் செய்தது விபத்திற்கு காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →