Apr 19, 2026
Thisaigal NewsYouTube
வானில் வர்ணஜாலம் நிகழ்த்திய சக்திவாய்ந்த சூரியப் புயல்
உலகச் செய்திகள்

வானில் வர்ணஜாலம் நிகழ்த்திய சக்திவாய்ந்த சூரியப் புயல்

Share:

NOAA, மே 11-

20 ஆண்டுகளில் மிகவும் சக்திவாய்ந்த சூரியப் புயல் வெள்ளிக்கிழமை பூமியைத் தாக்கியுள்ளது. இதானல், பவர் கிரிட்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

20 ஆண்டுகளில் மிகவும் சக்திவாய்ந்த சூரியப் புயல் வெள்ளிக்கிழமை பூமியைத் தாக்கியுள்ளது. இதானல், உலகின் பல நாடுகளில் வானத்தில் கண்கவர் வர்ணஜாலக் காட்சிகள் தோன்றின. ஆனால், இந்தச் சூரியப் புயலால் செயற்கைக்கோள்கள் மற்றும் பவர் கிரிட்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (NOAA) விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையத்தின்படி, கரோனல் மாஸ் எஜெக்ஷன் (CMEs) எனப்படும் சூரியன் பிளாஸ்மா மற்றும் காந்தப்புலங்களை வெளியேற்றும் நிகழ்வு, தீவிர புவி காந்த புயலாக மாறியுள்ளது.

இதற்கு முன் அக்டோபர் 2003ஆம் ஆண்டு இதேபோல சக்திவாய்ந்த சூரியப் புயல் பூமியைத் தாக்கியது. "ஹாலோவீன் புயல்கள்" என்று அழைக்கப்பட்ட அந்தச் சூரியப்புயலின் தாக்கத்தால் ஸ்வீடனில் மின்தடை ஏற்பட்டது. தென்னாப்பிரிக்காவில் பவர் கிரிட்டுகள் சேதம் அடைந்தன.

வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சூரியப் புயலைத் தொடந்து, வரவிருக்கும் நாட்களில் மேலும் சூரியப் புயல்கள் பூமியைத் தாக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் NOAA கூறியுள்ள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து சூரியப் புயல் பூமியைத் தாக்கியபோது வானில் தோன்றிய விண்ணமயமான காட்சிகளை பலர் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

சூரியப்புயலால் பூமியின் காந்தப்புலத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு செயற்கைக்கோள் ஆபரேட்டர்கள், விமான நிறுவனங்கள் மற்றும் பவர் கிரிட்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related News

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு