Oct 13, 2026
Thisaigal NewsYouTube

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

வெலிங்டன், மார்ச்.25

நியூசிலாந்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது. அந்நிலநடுக்கம் ரிக்டர் அளவையில் 7.0 ஆகப் பதிவாகியிருந்தது.

நியூசிலாந்தின் மேற்கு பகுதியில் அந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மையமிட்டிருந்தது. நிலநடுக்கத்தின் அதிர்வு காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்து வெளியே ஓடியதாகத் தகவல் கூறுகிறது.

அந்நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

நியூசிலாந்திலேயே பதிவான மிக வலுவான நிலநடுக்கம் 1931ம் ஆண்டு ஹாக்ஸ் பகுதியில் ஏற்பட்டது தான். அது ரிக்டர் அளவையில் 7.8 ஆக பதிவாகியிருந்தது. அதில் 256 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →