Oct 12, 2026
Thisaigal NewsYouTube

கத்தி முனையில் விமானத்தை கடத்திய நபர் சுட்டுக் கொலை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கத்தி முனையில் விமானத்தை கடத்திய நபர் சுட்டுக் கொலை

பெலிஸ், ஏப்ரல்.18-

மத்திய அமெரிக்க நாடான பெலிஸில் சிறிய ரக பயணிகள் விமானத்தைக் கத்தி முனையில் கடத்திய நபரை, பயணி ஒருவர் நடுவானில் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெலிஸ் எல்லையில் உள்ள கோரோஷல் எனும் சிறிய நகரில் இருந்து சுற்றுலாத் தலமான சான் பெட்ரோவுக்கு 14 பயணிகள் மற்றும் 2 விமானிகளுடன் சிறிய ரக விமானம் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென கத்தி முனையில் ஒருவர் விமானத்தைக் கடத்தினார். தன்னை இந்த நாட்டை விட்டு வெளியே கொண்டு சென்று விடுமாறு கோரிக்கை விடுத்தார். இதனால், விமானத்தில் பதற்றம் நிலவியது.

அப்போது, சுதாரித்துக் கொண்ட பயணிகளில் ஒருவர், தன்னிடம் இருந்த துப்பாக்கியால், அந்த நபரை சுட்டுக் கொன்றார். அச்சம்பவத்தால் சுமார் 2 மணிநேரம் விமானம் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தது. பிறகு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், விமானத்தை கடத்த முயன்றது அமெரிக்காவைச் சேர்ந்த அகின்யேலா சாவா டெய்லர் என்ற விவரம் தெரிய வந்தது. இந்த கடத்தல் சம்பவத்தின் போது, விமானி உள்பட 3 பேரை அவர் கத்தியால் குத்தியுள்ளார். அதன்பிறகு, சுற்றுலாப் பயணி ஒருவர் தம்மிடம் இருந்த் லைசென்ஸ் பெற்ற துப்பாக்கியால், அந்த நபரைச் சுட்டுக் கொன்றது தெரிய வந்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →
மலேசியா–ஜோர்டான் உறவு மேலும் வலுப்பெறும்: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் நம்பிக்கை

மலேசியா–ஜோர்டான் உறவு மேலும் வலுப்பெறும்: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் நம்பிக்கை

ரியாத் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல் -  ஒருவர் பலி, 11 பேர் காயம்

ரியாத் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல் - ஒருவர் பலி, 11 பேர் காயம்

எகிப்து வருமாறு மாமன்னர், பிரதமருக்கு அதிபர் அப்டேல் ஃபாத்தா எல்-சிசி அழைப்பு

எகிப்து வருமாறு மாமன்னர், பிரதமருக்கு அதிபர் அப்டேல் ஃபாத்தா எல்-சிசி அழைப்பு

எகிப்து அதிபருக்கு மலேசியாவில் அரச மரியாதை: 21 பீரங்கி குண்டுகள் முழங்க பிரம்மாண்ட வரவேற்பு

எகிப்து அதிபருக்கு மலேசியாவில் அரச மரியாதை: 21 பீரங்கி குண்டுகள் முழங்க பிரம்மாண்ட வரவேற்பு

மியன்மாரில் நீடித்த அமைதிக்கு மலேசியா துணை நிற்கும்: பிரதமர் அன்வார் உறுதி

மியன்மாரில் நீடித்த அமைதிக்கு மலேசியா துணை நிற்கும்: பிரதமர் அன்வார் உறுதி

அன்வார், மியன்மார் அதிபர் மின் ஆங் லாயிங் சந்திப்பு - மலேசியாவிலுள்ள மியன்மார் நாட்டவர்கள் குறித்து பேச்சுவார்த்தை

அன்வார், மியன்மார் அதிபர் மின் ஆங் லாயிங் சந்திப்பு - மலேசியாவிலுள்ள மியன்மார் நாட்டவர்கள் குறித்து பேச்சுவார்த்தை