Jan 23, 2026
Thisaigal NewsYouTube
உலகின் மிக நெரிசலான நகரங்கள்: 2-வது இடத்தில் பெங்களூரு
உலகச் செய்திகள்

உலகின் மிக நெரிசலான நகரங்கள்: 2-வது இடத்தில் பெங்களூரு

Share:

பெங்களூரு, ஜனவரி.23-

உலக அளவில் 2025ஆம் ஆண்டுக்கான போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரம் குறித்து ஆய்வை நெதர்லாந்தை அடிப்படையாக கொண்ட லொகேஷன் டெக்னாலஜி நிறுவனமான டாம்டாம் மேற்கொண்டது. இந்த நிறுவனம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி, 2025ம் ஆண்டில் உலக அளவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர வரிசையில் மெக்சிகோ நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை முறையே பெங்களூரு, டப்ளின் நகரங்கள் பெற்றுள்ளன.

பெங்களூருவில் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 1.7 சதவீத புள்ளிகள் போக்குவரத்து நெரிசலின் அளவு அதிகரித்துள்ளது. கடந்த மே 17ம் தேதி பெங்களூரு நகர போக்குவரத்தின் மிக மோசமான தினம். நெரிலின் அளவு 101 சதவீதம் மாலை 6 மணி அளவில் நிலவியது. இது 183 சதவீதமாக உயர்ந்து 2.5 கிமீ தூரத்தை கடக்க 15 நிமிடங்கள் ஆகியது. பெங்களூருவை போன்று 6 இந்திய நகரங்கள் போக்குவரத்து நெரிசலில் உலக அளவில் முதல் 35 இடங்களைப் பிடித்துள்ளன. புனே நகரம் 5வது இடத்தையும், மும்பை 18, புதுடெல்லி 23, கொல்கத்தா 29, ஜெய்பூர் 30, சென்னை 32வது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News