Mar 12, 2026
Thisaigal NewsYouTube
வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிப்பதற்காக டிரோன்கள்..!! தென்கொரிய அதிபர் உத்தரவு
உலகச் செய்திகள்

வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிப்பதற்காக டிரோன்கள்..!! தென்கொரிய அதிபர் உத்தரவு

Share:

தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் மீது தொடர் ஏவுகணை சோதனை, டிரோன் தாக்குதல் போன்றவற்றை வடகொரியா நடத்தியது. எனவே கொரிய தீபகற்பத்தில் போர்ப்பதற்றம் நிலவி வந்தது.

இதனால் வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிக்க தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து முத்தரப்பு போர்ப்பயிற்சியில் ஈடுபட்டன. இதற்கு வடகொரியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டதால் கடந்த ஆண்டு இறுதியில் தென்கொரியாவின் கங்வாடோ தீவு மற்றும் தலைநகர் சியோல் ஆகிய பகுதியில் வடகொரியா 5 டிரோன் தாக்குதலை நடத்தியது. இதனை தென்கொரிய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். எனினும் இந்த சம்பவம் அங்கு போர்ப்பதற்றத்தை அதிகரித்தது.

இதனையடுத்து நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக டிரோன்களை உருவாக்க தென்கொரியா முடிவு செய்தது. இதற்கான கொள்கை தென்கொரிய ராணுவத்தால் கடந்த மாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Related News

ஈரான் போர்: இந்திய எண்ணெய் கப்பல் ஹார்முஸ் நீரிணை வழியாக மும்பையை வந்தடைந்தது

ஈரான் போர்: இந்திய எண்ணெய் கப்பல் ஹார்முஸ் நீரிணை வழியாக மும்பையை வந்தடைந்தது

நேரலையில் பேசிக்கொண்டிருந்த போதே மரணம்: சீன இன்ஃப்ளூயன்சரின் கடைசி நிமிடங்கள்!

நேரலையில் பேசிக்கொண்டிருந்த போதே மரணம்: சீன இன்ஃப்ளூயன்சரின் கடைசி நிமிடங்கள்!

பள்ளி மாணவி படுகொலை: குற்றவாளிகளைத் தூக்கிலிடக் கோரி மக்கள் போராட்டம் - பதற்றத்தில் விழுப்புரம்!

பள்ளி மாணவி படுகொலை: குற்றவாளிகளைத் தூக்கிலிடக் கோரி மக்கள் போராட்டம் - பதற்றத்தில் விழுப்புரம்!

தலைகீழ் மாற்றம்: விறகு அடுப்பிற்கு மாறும் ஓட்டல்கள்; மின்சார அடுப்பைத் தேடும் இல்லத்தரசிகள்!

தலைகீழ் மாற்றம்: விறகு அடுப்பிற்கு மாறும் ஓட்டல்கள்; மின்சார அடுப்பைத் தேடும் இல்லத்தரசிகள்!

"பருவநிலை மாற்றம்: சவால்களைப் புதிய பொருளாதார வாய்ப்புகளாக மாற்ற வேண்டும்" - அமைச்சர் இந்திராணி ராஜா

"பருவநிலை மாற்றம்: சவால்களைப் புதிய பொருளாதார வாய்ப்புகளாக மாற்ற வேண்டும்" - அமைச்சர் இந்திராணி ராஜா

ஏப்ரல் 1 முதல் சிங்கப்பூர் - பாத்தாம் படகு கட்டணம் உயர்வு: பயணிகள் அதிருப்தி!

ஏப்ரல் 1 முதல் சிங்கப்பூர் - பாத்தாம் படகு கட்டணம் உயர்வு: பயணிகள் அதிருப்தி!