Oct 18, 2025
Thisaigal NewsYouTube
"புதுசு புதுசா கிளம்புதே.." சீனாவுக்கு வந்த மேஜர் பிரச்சனை.. அலர்ட் ஆகும் ஜி ஜின்பிங்! என்ன செய்வார்
உலகச் செய்திகள்

"புதுசு புதுசா கிளம்புதே.." சீனாவுக்கு வந்த மேஜர் பிரச்சனை.. அலர்ட் ஆகும் ஜி ஜின்பிங்! என்ன செய்வார்

Share:

உலகின் முக்கிய நாடுகளில் ஒன்றான சீனா இப்போது புதிதாக ஒரு பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. அதாவது கடந்த 50, 60 ஆண்டுகளாகவே உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகச் சீனா இருந்தது.

அந்நாடு குறுகிய காலத்தில் அடைந்த மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சிக்கும் இதுவே ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும், மக்கள்தொகை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன.

சீனா: ஒரு குழந்தை பாலிசியை மிகவும் கண்டிப்புடன் சீனா அமல்படுத்தியது. அதாவது ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் அரசு சலுகைகளைப் பெற முடியாது.. அவ்வளவு ஏன் அரசு வேலையில் கூட சேர முடியாது என்ற திட்டங்களை அமல்படுத்தியது. மற்ற நாடுகளிலும் இதுபோன்ற திட்டங்கள் இருக்கிறது என்றாலும் கூட சீனா மிகவும் கண்டிப்புடன் இந்தத் திட்டத்தை அமல்படுத்தியது. இதனால் அதன் மக்கள்தொகை வேகமாகக் குறைந்தது.

மக்கள் தொகையில் முதலிடத்தில் இருந்த சீனா, இரண்டாவது இடத்திற்கும் சரிந்தது. இது நல்ல விஷயம் தான். ஆனால், சீனாவின் வருங்கால வளர்ச்சியை இதுவே பாதிக்கலாம். அதாவது மக்கள் தொகை குறைவது என்பது குழந்தைகள் பிறப்பு குறைவதே குறிக்கிறது. இதனால் வரும் காலத்தில் சீனாவில் இருக்கும் உழைக்கும் வயதில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை குறையும். அந்நாட்டு இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைவது பொருளாதார பாதிப்பையும் ஏற்படுத்தும் ஆபத்து இருக்கிறது.

புதிய பிரச்சினை: இதில் இருக்கும் பிரச்சினையைச் சீனா இப்போது தான் புரிந்து கொண்டிருக்கும் நிலையில், மக்கள்தொகை அதிகரிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது. இருப்பினும், அதில் பல்வேறு சிக்கல்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாகச் சீன இளைஞர்கள் திருமணத்தின் மீதே நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்களாம். குடும்ப வன்முறை அங்கே அதிகரிக்கும் நிலையில், திருமணத்தின் மீதான நம்பிக்கையை அந்நாட்டு இளைஞர்கள் இழந்துள்ளனராம்.

Related News