Oct 20, 2025
Thisaigal NewsYouTube
2026 நவம்பரில் இந்தியா பல துண்டுகளாக உடையும், பரபரப்பை கிளப்பிய பாகிஸ்தான் முன்னாள் செனட்டர்
உலகச் செய்திகள்

2026 நவம்பரில் இந்தியா பல துண்டுகளாக உடையும், பரபரப்பை கிளப்பிய பாகிஸ்தான் முன்னாள் செனட்டர்

Share:

இந்தியா, மே 04-

இந்தியாவின் பரபரப்பான மக்களவைத் தேர்தல் 2024க்கு மத்தியில், பாகிஸ்தானின் முன்னாள் செனட்டரான பைசல் அபிடி, இந்தியாவின் உள்விவகாரங்கள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை குறித்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

ஜிடிவி செய்தியில் ஒளிபரப்பப்பட்ட பேட்டியின் போது, முன்னாள் பாகிஸ்தான் செனட்டரிடம், பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறப்படும் 'இந்துத்துவா' நிகழ்ச்சி மற்றும் இந்தியர்களிடமிருந்து அவருக்கு பெரும் ஆதரவு உள்ளது என்று கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த பைசல் அபிடி, "இந்தியா தனது நாடாளுமன்றத்தில் அகண்ட பாரதம் குறித்த சுவரோவியத்தை வைத்தபோது நேபாளம், இலங்கை, பூடான் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை கோபமடைந்தன. பாகிஸ்தான் அதைப் பற்றி பேசியபோது மக்கள் எங்களை கேலி செய்தனர். ஆனால் அது உண்மையாக மாறியது.

26 நவம்பர் 2026 அன்று, இந்தியா பல துண்டுகளாக உடைந்து விடும் என்று உறுதியாக கூறுகிறேன். மோடியின் ஹிடுத்வா நிகழ்ச்சி நிரலில் இருந்து மக்களை வெளியேற்றுவதுதான் ஒரே வழி ஏஜென்சிகள் மூலம் அசம்பாவிதம் நடக்கலாம். ஆனால் மோடி ஆட்சியில் இருக்கும் போது இந்தியா அழிக்கப்பட வேண்டும். அது மிக முக்கியமானது” என்று கூறினார்.

பைசல் அபிடியின் இந்த ஆத்திரமூட்டும் பேச்சு, குறிப்பாக மோடி ஆட்சியில் இருக்கும் போதே இந்தியாவை துண்டாட வேண்டும் என்ற அவரது வலியுறுத்தல், பல்வேறு தரப்பிலிருந்தும் வலுவான எதிர்வினைகளை எழுப்பியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஒருவர், “இதன் அர்த்தம், அவர்கள் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் தங்கள் வெடிமருந்துகள் மற்றும் மனித வளங்களை தயார் நிலையில் வைத்துள்ளனர்" என்று பதிவிட்டிருந்தார்.

மற்றொரு இந்தியர், “ஏழையாகிவிட்ட உங்கள் நாட்டில் கவனம் செலுத்துங்கள். இந்தியாவைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். இந்தியா தன்னைத் தானே பார்த்துக் கொள்ளும். முதலில் உங்கள் நாட்டைக் காப்பாற்ற அல்லாஹ்விடம் சொல்லுங்கள்" என்று குறிப்பிட்டார்.

Related News