Sep 13, 2026
Thisaigal NewsYouTube
செயற்கை நுண்ணறிவு: உலக நாடுகளின் கூட்டுறவை வலியுறுத்திய சீன அதிபர் ஜி ஜின்பிங்.
உலகச் செய்திகள்

செயற்கை நுண்ணறிவு: உலக நாடுகளின் கூட்டுறவை வலியுறுத்திய சீன அதிபர் ஜி ஜின்பிங்.

Share:

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் எந்த ஒரு தனி நாடும் ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்கக் கூடாது என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் எச்சரித்துள்ளார். AI வளர்ச்சி என்பது ஒரு நாட்டின் தனிப்பட்ட சாதனையாக இருக்கக்கூடாது என்றும், இந்த தொழில்நுட்பத்தின் நன்மைகள் உலக நாடுகள் அனைத்தும் சமமாகப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

AI தொழில்நுட்பம் மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்குப் பயன்பட வேண்டுமே தவிர, அது நாடுகளுக்கு இடையே பிளவை உருவாக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அனைத்து நாடுகளும் இணைந்து செயல்படுவதன் மூலம் மட்டுமே AI-ன் சவால்களை எதிர்கொண்டு, அதன் முழுமையான நன்மைகளைப் பெற முடியும் என்று ஜி ஜின்பிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News