லண்டன்: 10 பேருந்துகளை ஒன்றாக சேர்த்தால் எவ்வளவு பெரிய அளவு இருக்குமோ, அந்த அளவிற்கான சிறிய கோள் ஒன்று நம் தலைக்கு மேல் பறந்து வந்து கொண்டிருக்கிறது. பூமியை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கும் 2013 wv44 என்று அந்த சிறிய கோள் குறித்து நாசா முக்கிய தகவல் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு நாளும் நமது பூமியை நோக்கி நூற்றுகணக்கான விண்கற்கள் வந்துவிட்டு கடந்து செல்கின்றன. சில விண்கற்கள் பூமியில் விழும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்துள்ளது. அதேநேரம் இதில் மிகப்பெரிய விண்கற்கள் மட்டுமே பேசுபொருளாக இருக்கும். அந்த வகையில் பூமியை நோக்கி 10 பேருந்துகள் அளவு உள்ள 2013 wv44 என்ற சிறிய கோள் வந்து கொண்டிருக்கிறது என்று நாசா கூறியுள்ளது.
இந்த சிறிய கோள் 524 அடி (160 மீட்டர்) விட்டம் உடையது என்று நாசா மதிப்பிடப்பட்டுள்ளது. இது 394 அடி உயரம் உடைய லண்டன் ஐ சின்னத்தை விடவும்,310 அடி உயரம் உள்ள பிக் பென் போன்ற சின்னத்தைவிட மிக அதிகம் உடையது என்று நாசா தெரிவித்துள்ளது.
இதை சிறிய கோள் இன்று நமது பூமிக்கு அருகில் வரும் என்று அறிவிக்கப்படுள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, 2013 WV44 என்ற சிறிய கோள் வினாடிக்கு 11.8 கிமீ வேகத்தில் வேகமாக வந்து கொண்டிருக்கிறது. அதாவது ஒரு மணி நேரத்திற்கு 26,000 மைல்களுக்கு மேல் வேகத்தில் செல்கிறதாம். அதாவது ஒலியின் வேகத்தை விட 34 மடங்கு வேகத்தில் வருகிறது என்று நாசா கணித்துள்ளது.
இந்த தூரம் நமது சந்திரனை விட ஒன்பது மடங்கு தொலைவில் இருந்தாலும், அது இன்னும் பூமிக்கு அருகில் உள்ள பொருள் (neo) என்ற அடிப்படையில் நாசா இதனை பற்றி தகவலை வெளியிட்டுள்ளது. நாசாவை பொறுத்தவரை, இவை விண்கல்கள் வால்மீன்கள் அல்லது சிறுகோள்களாக இருக்கலாம். இவை அனைத்தும் அருகில் உள்ள கிரகங்களில் ஈர்ப்பு விசையால் பூமியின் சுற்றுப்பாதையில் சுற்றி வரும் எச்சங்கள் ஆகும்.