Oct 11, 2026
Thisaigal NewsYouTube

ஹைதராபாத்தில் மூன்று மாடி கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 17 பேர் பலி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஹைதராபாத்தில் மூன்று மாடி கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 17 பேர் பலி

ஹைதராபாத், மே.18-

ஹைதராபாத்தில் மூன்று மாடி கட்டடத்தில், ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள குல்சார் ஹவுஸில், ஒரு நகைக் கடையில் இத்தீ விபத்து ஏற்பட்டது. இந்த கட்டடத்தின் முதல் மாடிக்கு தீ பரவியது. மூன்று மாடிகளைக் கொண்ட இந்த கட்டடத்தில் தீ மளமளவென பரவியது.

நீண்ட நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் 17 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் அங்கு சிக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் ஐந்து பேர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →