Oct 18, 2025
Thisaigal NewsYouTube
விஷ வாயு கசிவு.. கொத்துக் கொத்தாக தரையில் விழுந்து பலியான மக்கள்.. தென் ஆப்பிரிக்காவில் பயங்கரம்!
உலகச் செய்திகள்

விஷ வாயு கசிவு.. கொத்துக் கொத்தாக தரையில் விழுந்து பலியான மக்கள்.. தென் ஆப்பிரிக்காவில் பயங்கரம்!

Share:

தென் ஆப்பிரிக்காவின் ஜோகனர்ஸ்பர்க் மாகாணத்தின் போக்ஸ்பர்க் பகுதியில் நைட்ரேட் ஆக்சைடு வாயு கசிந்ததில் 16 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவின் ஜோகனர்ஸ்பர்க் மாகாணம் போக்ஸ்பர்க் நகரில் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு சுரங்க வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கான தற்காலிக குடியிருப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அந்த குடியிருப்பு பகுதியில் நேற்று திடீரென வாயு கசிவு ஏற்பட்டது. இந்த வாயுவை சுவாதித்த 24 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். வாயு கசிவால் மயக்கமடைந்த சுமார் 10க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, வாயு கசிவுக்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறை மற்றும் உள்ளூர் அரசு அதிகாரிகளின் கூற்றுப்படி, உரிமம் பெறாத சுரங்கத் தொழிலாளர்கள், தங்கத்தை சுத்திகரிக்க பயன்படுத்தியபோது அபாயகரமான நைட்ரேட் வாயு கசிவு ஏற்பட்டதில் மூன்று குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் 16 பேர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மருத்துவர்களின் வருகைக்குப் பிறகு, வாயு கசிவால் மயக்கமடைந்த சிலரை உயிர்ப்பிக்க முடிந்தது, அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்" என்று அவசர சேவை செய்தித் தொடர்பாளர் வில்லியம் என்ட்லாடி தெரிவித்துள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

மருத்துவமனையில் உள்ளவர்களில், நான்கு பேர் மோசமான நிலையில் உள்ளனர், 11 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். ஒருவர் ஓரளவுக்கு நிலையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 5 பெண்களும் மூன்று குழந்தைகளும் அடங்குவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Related News