Oct 20, 2025
Thisaigal NewsYouTube
மூணு நாளில் உயிரைக் கொல்லும் ஆபத்தான வைரஸ்! சீன ஆய்வகத்தில் நடக்கும் விபரீத விளையாட்டு
உலகச் செய்திகள்

மூணு நாளில் உயிரைக் கொல்லும் ஆபத்தான வைரஸ்! சீன ஆய்வகத்தில் நடக்கும் விபரீத விளையாட்டு

Share:

சீனா, மே 27-

இந்த மரபணு மாற்றப்பட்ட வைரஸ் மூன்று நாட்களில் உயிரைப் பறிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. ஆய்வகத்தில் பயன்படுத்தப்பட்ட வெள்ளெலிகளை இந்த வைரஸ் மூன்று நாட்களுக்குள் கொன்றதாகக் கூறப்படுகிறது.

சீனாவின் ஹெபெய் மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எபோலாவின் சில பகுதிகளைப் பயன்படுத்தி ஒரு புதிய வைரஸை வடிவமைத்துள்ளனர். நோய் தொடர்பான ஆய்வுக்காக இந்த நோய்க்கிருமி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மரபணு மாற்றப்பட்ட வைரஸ் மூன்று நாட்களில் உயிரைப் பறிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. ஆய்வகத்தில் பயன்படுத்தப்பட்ட வெள்ளெலிகளை இந்த வைரஸ் மூன்று நாட்களுக்குள் கொன்றதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே லட்சக்கணக்கான உயிர்களைக் கொன்ற கொரோனா வைரஸ் (COVID-19), சீனாவின் வுஹான் நகரில் உள்ள ஆய்வகத்தில் தோற்றுவிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இப்போது இந்த புதிய வைரஸ் சீனாவில் இருந்து உருவாகியுள்ள புதிய அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஆராய்ச்சியாளர்கள் எபோலா வைரஸில் உள்ள கிளைகோபுரோட்டீனைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த வைரஸை செல்களைப் பாதித்து மனித உடல் முழுவதும் பரவும். எபோலா நோயாளிகளில் காணப்படுவதைப் போன்ற கடுமையான உறுப்பு செயலிழப்பும் ஏற்படக்கூடும் எனக் கூறப்படுகிறது.

ஆய்வில் பயன்படுத்திய சில வெள்ளெலிகளின் கண் இமைகளின் மேற்பரப்பில் சிரங்குகள் ஏற்பட்டு, இறுதியில் அவற்றின் கண்பார்வை போய்விட்டது.

2020ஆம் ஆண்டு ஜனவரியில் கோவிட்-19 பெருந்தொற்று பரவலை முன்னிட்டு பொது சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் சீன இறைச்சி சந்தையில் இருந்து தான் உலகம் முழுவதும் பரவியது என்றும் சீன ஆய்வகத்தில் இருந்து கசிந்தது என்றும் தகவல்கள் வெளிவந்தன.

கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வக சூழலில் எபோலா அறிகுறிகளை ஆய்வு செய்வதே இந்த ஆய்வின் நோக்கம் என்று சீன ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். இதனால் வைரஸ் வெளியே பரவாமல் இருக்க தடுப்பு உத்திகளை மேற்கொள்வதாகவும் கூறுகின்றனர்.

Related News