Oct 13, 2026
Thisaigal NewsYouTube

நியூ மெக்சிகோ பூங்காவில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நியூ மெக்சிகோ பூங்காவில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி

வாஷிங்டன், மார்ச்.23-

அமெரிக்காவில் உள்ள நியூ மெக்சிகோவின் லாஸ் குரூஸில் பூங்காவொன்று உள்ளது. இந்த பூங்காவிற்கு ஏராளமான மக்கள் வருவது வழக்கம். இங்கு கார் கண்காட்சி கோலாகலமாக நடந்தது. இதில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது திடீரென சில மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 15 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

தாக்குதல் நடத்திய நபர்களை அடையாளம் காணும் தீவிரமாக நடந்து வருகிறது. துப்பாக்கிச்சூடு நடத்திய இடத்தில் இருந்த சி.சி.டி.வி., காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பூங்காவில் குண்டுகள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →