Jan 26, 2026
Thisaigal NewsYouTube
இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 11 பேர் உயிரிழப்பு
உலகச் செய்திகள்

இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 11 பேர் உயிரிழப்பு

Share:

ஜகார்த்தா, ஜனவரி.26-

இந்தோனேசியாவில் கடும் நிலச்சரிவுக்கு 11 பேர் பலியாகியுள்ளனர். 82 பேர் காணாமல் போயிருக்கின்றனர். இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.நேற்று முன்தினம் அங்கு கடும் நிலச்சரிவு ஏற்பட்டதில் பசிர்லாங்கு என்ற கிராமத்தில் 34 வீடுகள் மண்ணில் புதையுண்டன.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து அந்த கிராமத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீட்புப் படை வீரர்கள் 230 பேரை மீட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைத்துள்ளனர். நேற்று மண்ணில் புதையுண்ட நிலையில் இருந்த 2 உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. இதையடுத்து பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.மேலும் 82 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

Related News