சிங்கப்பூர், ஜனவரி.21-
அரசு அதிகாரிகள் போல் நாடகமாடி பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், நான்கு மலேசியர்கள் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்.
நான்கு தனித்தனி சம்பவங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ள இக்குற்றச்சாட்டுகளின் படி, சிங்கப்பூர் மோசடி தடுப்பு அதிகாரிகள், மலேசிய வர்த்தக குற்றப் புலனாய்வு அதிகாரிகளுடன் இணைந்து சந்தேக நபர்கள் நால்வரையும் கைது செய்துள்ளனர்.
இந்த நால்வரும் தனித்தனியாக, சிங்கப்பூர்வாசிகளிடம் பண மோசடியில் ஈடுபட்டு, பல மில்லியன் டாலர்களை மோசடி செய்துள்ளதாக அவர்கள் மீது புகார்கள் பெறப்பட்டுள்ளன.
அதே வேளையில், சிங்கப்பூரில் இது போன்ற மோசடிகளுக்கு ஆளானவர்களிடமிருந்து பணம், தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களைச் சேகரிப்பதற்காக மலேசியர்கள், சிங்கப்பூருக்குப் பயணம் செய்யும் போக்கு அதிகரித்து வருவதாக சிங்கப்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதே வேளையில், இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, சிங்கப்பூரில் ஆறு முதல் 24 பிரம்படிகள் வரை கட்டாயத் தண்டனை விதிக்கப்படும் என்று அந்நாட்டு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.








