சீனாவின் ஷாங்காயில் வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
மிகவும் குளிரான காலநிலையுடன் இணைந்து பனிப்பொழிவு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக நகரத்தின் சில வீதிகள் மூடப்பட வேண்டியிருந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2018க்குப் பிறகு ஷாங்காயில் இதுபோன்ற பனிப்பொழிவு ஏற்படுவது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் சுமார் 12 பகுதிகளில் கடுமையான குளிர் காலநிலை நிலவுவதாகவும், பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.








