Oct 18, 2025
Thisaigal NewsYouTube
"சர்வாதிகாரம்.." இஸ்ரேலில் ராணுவ ஆட்சி? நீதித்துறை பவரை காலி செய்த பிரதமர் நெதன்யாகு! பறந்த கடிதம்
உலகச் செய்திகள்

"சர்வாதிகாரம்.." இஸ்ரேலில் ராணுவ ஆட்சி? நீதித்துறை பவரை காலி செய்த பிரதமர் நெதன்யாகு! பறந்த கடிதம்

Share:

நீதித்துறையின் அதிகாரங்களை காலி செய்யும் வகையில் நெதன்யாகு கொண்டு வந்த சட்டம், கடும் எதிர்ப்பிற்கு மத்தியிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நாடு இஸ்ரேல்.. இங்கே மிகவும் பவர்புல்லான அரசியல் தலைவராக இருப்பவர் பெஞ்சமின் நெதன்யாகு.. இவர் கடந்த 2009 முதல் பிரதமராக இருந்து வருகிறார்.

இடைப்பட்ட காலங்களில் அவரது கட்சி உட்பட எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் பிரதமர் பதவி தனக்கு வரும்படி பார்த்துக் கொண்டார். இதனால் சுமார் 12 ஆண்டுகள் அவர் பிரதமர் பதவியில் தொடர்ந்தார்.

இதற்கிடையே கடந்த 2021இல் அங்கு அவரை தவிர்த்த ஒரு கூட்டணி உருவானது.. இதனால் அந்த சில மாதங்கள் மட்டும் அவர் பிரதமர் பதவியை இழக்க நேரிட்டது. இருப்பினும், 2022இல் கூட்டணி அரசு கவிழவே, பக்காவாக காய் நகர்த்தி அப்போது பிரதமர் பதவிக்கு தனக்கு வருவது போல இவர் பார்த்துக் கொண்டார். அந்தளவுக்கு அதிகாரம் எப்போதும் தன்னிடம் இருப்பதையே நெதன்யாகு விரும்புவார்.

அங்கே சமீப காலங்களாக நெதன்யாகுவுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது மற்ற அரசியல் கட்சிகள் இல்லை.. மாறாக அங்கே இருக்கும் நீதிமன்றம்.. நெதன்யாகு மீது பல ஊழல் வழக்குகள் நடந்து வந்தன. இதை அந்நாட்டு நீதித்துறை தீவிரமாகக் கையில் எடுத்த நிலையில், நெதன்யாகு பிரதமர் பதவியை இழக்கலாம் எனச் சொல்லப்பட்டது. இதன் காரணமாகவே நெதன்யாகு நீதித்துறையில் சில முக்கிய மாற்றங்களைக் கொண்டு வர முடிவெடுத்தார்.

இதற்கு எதிராக மிகப் பெரிய மக்கள் போராட்டம் நடைபெற்ற போதிலும், அதையெல்லாம் அவர் கண்டுகொள்ளவில்லை. தான் விரும்பியபடி நீதித்துறையின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் சட்டங்களைக் கொண்டு வந்தார். இதற்கிடையே இஸ்ரேலிய எம்பிக்கள் இந்தச் சட்டங்களுக்கு நேற்று திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளனர். இந்தச் சட்டம் நிறைவேறும் போது, எதிர்க்கட்சி எம்பிக்கள் நாட்டிற்கே அவமானம் என்று கோஷமிட்டபடி, நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறினர்.

Related News