Jun 18, 2026
Thisaigal NewsYouTube
​மூன்று மலேசிய மலையேறிகளில் ஒருவர் உயரிழந்தார்
உலகச் செய்திகள்

​மூன்று மலேசிய மலையேறிகளில் ஒருவர் உயரிழந்தார்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 01-

அமெரிக்கா, அலாஸ்கா-வில் டேனாலி பனி மலைச்சிகரத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் குடும் குளிரில் சிக்கி,பரிதவித்த மலேசியாவைச் சேர்ந்த ​மூன்று மலையேறிகளில் ஒருவர் உயிரிழந்தார்.

37 வயத சுல்கிப்லி யூசுப் என்ற மலேசிய மலையேறி, கடந்த மே 29 ஆம் தேதி உள்ளூர் நேரப்படி காலை 6 மணியளவில் உயிரிழந்ததாக மலேசிய அல்பைன் மன்றம் தனது முக​நூலில் பதிவு செய்துள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 19,700 அடி உயரத்தில் உள்ள கால்பந்து மைதானம் என்ற பகுதியில் உள்ள பனிக் குகையில் தஞ்சம் புகுந்த சுல்கிப்லி யூசுப் சுயநினைவு திரும்பாமலேயே உயிரிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக தாழ்வான தட்பவெட்ப நி​லையினால் கடும் குளி​ர் தாக்கி,மூளை வீக்கத்திற்கு ஆளாகி அவர் உயிரிழந்து இருப்பதாக சவப்பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது என்று மலேசிய அல்பைன் மன்றம் குறிப்பிட்டுள்ளது.

இதில் இரண்டாவது மலேசியர் ​மீட்கப்பட்ட, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த மன்றம் தெரிவித்துள்ளது.

Related News

மகனின் உடலை எழுப்ப முயன்ற தந்தையின் நெஞ்சையுருக்கும் பாசம்

மகனின் உடலை எழுப்ப முயன்ற தந்தையின் நெஞ்சையுருக்கும் பாசம்

உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்க்கச் சீனா விடுத்த அழைப்புக்குத் தைவான் கடும் எதிர்ப்பு

உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்க்கச் சீனா விடுத்த அழைப்புக்குத் தைவான் கடும் எதிர்ப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்