Jan 16, 2026
Thisaigal NewsYouTube
4 மில்லியன் டாலர்களை வென்ற நபர்.. திடீரென உயிரிழப்பு.. மெரினா பே சிங்கப்பூர் கேசினோவில் நடந்த சம்பவம்!
உலகச் செய்திகள்

4 மில்லியன் டாலர்களை வென்ற நபர்.. திடீரென உயிரிழப்பு.. மெரினா பே சிங்கப்பூர் கேசினோவில் நடந்த சம்பவம்!

Share:

சிங்கப்பூர், ஜூன் 24-

மெரினா பே சிங்கப்பூர் கேசினோவில் $4 மில்லியன் வெற்றி பெற்றவர், தனது வெற்றிக்குப் பிறகு திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிங்கப்பூரில் உள்ள மெரினா பே சாண்ட்ஸ் கேசினோவில் அதிர்ச்சிகரமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. ஒரு நபர் 4 மில்லியன் டாலர்களை வென்ற சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டார். பெயரிடப்படாத நபர், கார்டியாக் அரெஸ்ட்டால் பாதிக்கப்பட்டார் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது.

அந்த குறிப்பிட்ட அதிர்ஷ்டசாலி வெற்றியாளர் $4 மில்லியன் ஜாக்பாட் வென்றார். கொண்டாட்டங்களுக்கு நடுவே அந்த நபர் சரிந்து விழுந்தார். அவரை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் உடனடியாக சூதாட்ட விடுதி ஊழியர்களால் தொடங்கப்பட்டன.

உடனே அவசர உதவியாளர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இந்த காணொளி சமூக ஊடக தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Related News