Oct 13, 2026
Thisaigal NewsYouTube

தெலுங்கானாவில் 6 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து 7 பேர் பலி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தெலுங்கானாவில் 6 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து 7 பேர் பலி

பத்ராச்சலம், மார்ச்.26-

தெலுங்கானா மாநிலம் பத்ராச்சலம் நகரில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் பலியாகினர். அங்கு ஒரு பகுதியில் கட்டுமானப் பணி நடந்து வந்ததுள்ளது. ஏற்கனவே இருந்த பழைய 2 மாடி கட்டிடம் மீது மேலும் 4 மாடிகளைப் புதிதாக கட்டியுள்ளனர்.

கட்டுமானப் பணிகள் பாதியில் இருந்தபோது எடை தாங்காமல் 6 மாடிக் கட்டிடம் மொத்தமாகச் சரிந்து விழுந்தது. இதில், உள்ளே சிக்கிய தொழிலாளர்கள் உட்பட 7 பேர் பலியாகினர். உள்ளே இன்னும் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டு இருக்கலாம் என்பதால் மீட்பு பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →