Oct 20, 2025
Thisaigal NewsYouTube
பல வருட பழக்கதோஷம் இன்னும் கமலை விட்டு போகல
சினிமா

பல வருட பழக்கதோஷம் இன்னும் கமலை விட்டு போகல

Share:

இந்தியா, ஏப்ரல் 03-

இந்த வருடம் பெரிய பெரிய நடிகர்களின் படங்களின் அப்டேட்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அதில் தக் லைஃப் பற்றி எதாவது ஒரு செய்தி அடிபட்டுக் கொண்டே இருக்கின்றது. பாராளுமன்ற தேர்தல் தக் லைஃப் படத்தின் போக்கையே மாற்றி விட்டது. தேர்தல் எப்படியும் மார்ச் மாதத்தில் வைப்பார்கள் என்றுதான் கமல் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தார்.

ஆனால் ஏப்ரல் 19 ஆம் தேதி என அறிவித்ததும் அந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்களின் கால்ஷீட்டிலும் பல மாறுதல்கள் ஏற்பட ஒரு சில நடிகர்கள் படத்தில் இருந்து விலக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள். முதலில் துல்கர் சல்மான் இந்தப் படத்தில் இருந்து விலகியதும் அவருக்கு பதிலாக சிம்பு நுழைந்தார். சிம்பு வந்ததும் ஜெயம் ரவி படத்தில் இருந்து விலகினார்.

ஜெயம் ரவிக்கு பதிலாக அரவிந்த் சுவாமி நடிப்பதாக தெரிகிறது. எப்படியும் கமலும் தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டுதான் இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்கு திரும்புவார் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் கமலுக்கும் மணிரத்னத்திற்கும் இடையே கதை விவாதத்தில் சில பல முரண்பாடுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே கமலிடம் கதை சொல்ல போகும் ஒவ்வொரு இயக்குனர்களின் நிலைமையை நாம் பார்த்திருக்கிறோம். சினிமாவை பற்றி அணு அணுவாக தெரிந்தவர். உதாரணமாக மிஷ்கின் ஒரு சமயம் கதை சொல்லப் போன போது இது அந்த படத்தின் கதை மாதிரியே இருக்கிறதே என்று பல்பு கொடுத்தார். அதே போல் தெறி படத்திற்கு பிறகு அட்லீ கமலை சந்திக்க சென்ற போது அவர் கண்ணில் படும்படி அபூர்வ சகோதரர்கள் படத்தின் புகைப்படத்தை தொங்க விட்டிருந்தார்.

இப்போது இதே போல் ஒரு பிரச்சினைதான் மணிரத்னத்திற்கும் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக மணிரத்னமும் கமலும் தான் ஒன்றாக கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றார்களம். அப்போது மணிரத்னம் கதை சொல்லும் போது சில விஷயங்களில் கமல் குறுக்கிடுவதாக தெரிகிறதாம். இதனாலேயே படத்தில் கொஞ்சம் தொய்வு ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

Related News