Oct 18, 2025
Thisaigal NewsYouTube
மதராஸி கதையில் முதலில் நடிக்க இருந்தது வேறொரு நடிகர்
சினிமா

மதராஸி கதையில் முதலில் நடிக்க இருந்தது வேறொரு நடிகர்

Share:

ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி என்ற படத்தை இயக்கி இருக்கிறார். வரும் செப்டம்பர் 5ம் தேதி இந்த படம் வெளியாகிறது. பெரிய எதிர்பார்ப்பும் இப்படத்தின் மீது இருக்கிறது. அதற்குக் காரணம் முருகதாஸ் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் படம் இயக்குவது தான்.

இந்நிலையில் தற்போது இந்தப் படம் பற்றி முக்கிய தகவலை முருகதாஸ் கூறி இருக்கிறார். இந்தக் கதையை 7 - 8 ஆண்டுகளுக்கு முன் முதலில் ஷாருக் கானுக்கு தான் அவர் சொன்னாராம். அவரும் நல்லா இருக்கு என சம்மதம் சொன்னாராம்.

2 வாரங்கள் கழித்து குறுஞ்செய்தி அனுப்பினேன். ஆனால் அவரிடமிருந்து பதில் கொஞ்சம் தாமதமாக வந்தது. அதனால் அதற்கு பிறகு நான் தொடர்பு கொள்ளவில்லை என முருகதாஸ் தெரிவித்து இருக்கிறார்.

Related News