Oct 17, 2025
Thisaigal NewsYouTube
ஆஸ்ட்ரோ பண்டிகை மகிழ்ச்சியைத் தூண்டுகிறது
சினிமா

ஆஸ்ட்ரோ பண்டிகை மகிழ்ச்சியைத் தூண்டுகிறது

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 6, 2022 – டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் உற்சாகமூட்டும் விரிவான உள்ளூர் மற்றும் சர்வதேச நிகழ்ச்சிகளின் முதல் ஒளிபரப்புகளுடனும் மூன்று புதிய அலைவரிசைகளுடனும் தீபாவளி பண்டிகையைப் மிக விமரிசையாக ஆஸ்ட்ரோ வரவேற்க்கிறது. பண்டிகைக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அனைத்து மலேசியர்களும் மின்னியல் தளமான ஆஸ்ட்ரோ உலகம், ராகா வானொலி மற்றும் இ-காமர்ஸ் தளமானக் கோ ஷாப் ஆகியவற்றில் தீபாவளி சிறப்புகளை எதிர்ப்பார்க்கலாம். ஆஸ்ட்ரோவின்இந்தியவாடிக்கையாளர் வணிகப் பிரிவுத்துணைத் தலைவர், பிரேம் ஆனந்த் கூறுகையில், “உள்ளூர் உள்ளடக்கம் மற்றும் திறமைகளை ஆக்கப்பூர்வமாக வெற்றிபெறச் செய்து அதில் முன்னிலை வகிப்பதற்கான எங்களின் பயணத்தைத் தொடரும் வேளையில், ​​இப்பண்டிகைக் காலத்தில் எங்கள் வாடிக்கையாளர்களுக்குப் பலதரப்பட்ட உயர்தர உள்ளூர் முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மேலும், மலேசியர்களுக்கானப் பொழுதுபோக்குத் தளமாக எங்களின் நோக்கத்தை வலுப்படுத்துவதால், உள்ளூர் தயாரிப்புகளின் பட்டையைத் தொடர்ந்து உயர்த்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பண்டிகைகளை நாம் ஒன்றாகக் கொண்டாடும் தருணத்தில், ​​நம் இதயங்களுக்கு நெருக்கமானவர்களுடன் நம் பிணைப்பைத் தழுவிக்கொள்ள இவ்வாண்டுக்கானக் கருப்பொருள் #இணைவோம்இணைப்போம் நம்மைத் தூண்டுகிறது. வாடிக்கையாளர்கள் தங்களதுக் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இரசிக்க, டெலிமூவிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், சமையல் நிகழ்ச்சிகள், பல்வேறு நிகழ்ச்சிகள் நகைச்சுவை நிகழ்ச்சிகள், வலைத் தொடர்கள், குறும்படங்கள் மற்றும் கச்சேரிகள் எனப் பல நிகழ்ச்சிகளை எதிர்ப்பார்க்கலாம். கூடுதலாக, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மேலும் மூன்று சிறந்தத் தமிழ் அலைவரிசைகளை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்: சன் நியூஸ் (அலைவரிசை 215), கேடிவி (அலைவரிசை 216) மற்றும் சன் லைவ் (அலைவரிசை 217) ஆகியவை டிவி மற்றும் ஆஸ்ட்ரோ கோ ஆகியவற்றில் மிகவும் பிரபலமான இந்திய நிகழ்ச்சிகளை வழங்குகின்றன. எங்கள் வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றியையும் பண்டிகையைக் கொண்டாடுபவர்களுக்குத், தீபாவளி நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.”

Related News