நடிகர் விக்ரம், கமல்ஹாசனுக்கு அடுத்து நடிப்பிற்கு பெயர் போன ஒரு பிரபலம்.
எந்த ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் சொன்னாலும் அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அது எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் செய்து காட்டுவார். ஐ படத்திற்காக விக்ரம் எடுத்த முயற்சிகளே அதற்கு உதாரணம்.
கடைசியாக இவரது நடிப்பில் வீர தீர சூரன் 2 திரைப்படம் வெளியானது.
இப்படத்திற்கு பிறகு பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும், இதனை வேல்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வந்தன.
இந்த நிலையில் நடிகர் விக்ரம், விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொடுள்ளதாகத் தெரிகிறது. தற்போது விஷ்ணு, நயன்தாரா-கவினை வைத்து Hi திரைப்படம் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.