Oct 20, 2025
Thisaigal NewsYouTube
விஜய் டிவியை முன்னணி நிறுவனம் வாங்கியுள்ளதா?
சினிமா

விஜய் டிவியை முன்னணி நிறுவனம் வாங்கியுள்ளதா?

Share:

சின்னத் திரையில் டாப் தொலைக்காட்சிகளில் ஒன்றாகும் விஜய் டிவி. ஆனால், தற்போது விஜய் டிவிக்கே பெரும் சோதனை காலம் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மக்களால் ரசிக்கப்பட்டு வரும் விஜய் டிவி கூடிய விரைவில் கலர்ஸ் நிறுவனத்திற்கு கைமாற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்து, ஜியோ ஹாட்ஸ்டாராக தற்போது ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது. ஜியோவுடன் ஏற்கனவே கலர்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது.

இந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியை கலர்ஸ் நிறுவனம் நல்ல விலைக்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் கூடிய விரைவில் விஜய் தொலைக்காட்சியின் சின்னமும் மாற்றப்படும் என தகவல் தெரிவிக்கின்றனர். இது விஜய் டிவியைப் பார்த்து ரசிக்கும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

நல்ல லாபத்திற்கு விஜய் டிவி விற்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், கலர்ஸ் நிறுவனம் சில அதிரடி முடிவுகளை எடுத்திருக்கிறதாம். இதில், இதுவரை விஜய் டிவியில் நடந்து வந்த பழைய நிகழ்ச்சிகள் முடித்துக் கொள்ளப்படவுள்ளனவாம்.

அதற்கு பதிலாக புத்தம் புது பொலிவுடன் புதிய நிகழ்ச்சிகளைத் தொடங்கப் போவதாக்க் கூறுகின்றனர். மேலும், பிரியங்கா, கோபிநாத் போன்ற பிரபல தொகுப்பாளர்களும் நீக்கப்பட இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Related News