இந்தியா, ஏப்ரல் 09-
இயக்குனர் நிதிலன் ஸ்வாமிநாதன் இயக்கத்தில் உருவாகும் மகாராஜா என்ற படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் பிரபல நடிகர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.
கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான "குரங்கு பொம்மை" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக களம் இறங்கியவர் தான் இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன். அதன் பிறகு தற்பொழுது பிரபல நடிகர் விஜய் சேதுபதியை வைத்து "மகாராஜா" என்கின்ற திரைப்படத்தை அவர் இயக்கி வருகிறார்.

கடந்த ஆண்டு இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. பாலிவுட் உலகில் புகழ்பெற்ற இயக்குனராக திகழ்ந்துவரும் அனுராக் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார்.
முடி திருத்தும் கடையில் உடல் முழுக்க காயத்தோடு, கையில் ரத்தம் வடிந்த கத்தியோடு வெளியான மக்கள் செல்வனின் போஸ்டர் ஒன்று தான் இதுவரை இப்படம் குறித்து வெளியான ஒரே அப்டேட் என்றால் அது மிகையல்ல.
இந்நிலையில் வருகின்ற மே மாதம் 16ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்கின்ற தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. ஆனால் மகாராஜா திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
