Oct 20, 2025
Thisaigal NewsYouTube
தங்கலான் படத்துக்காக இம்புட்டு ரிஸ்க் எடுத்து நடித்துள்ளாரா விக்ரம்
சினிமா

தங்கலான் படத்துக்காக இம்புட்டு ரிஸ்க் எடுத்து நடித்துள்ளாரா விக்ரம்

Share:

இந்தியா, ஏப்ரல் 17-

நடிகர் விக்ரமின் பிறந்தநாளான இன்று தங்கலான் படக்குழுவினர் அப்படத்தின் மிரட்டலான மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது.

நடிகர் விக்ரம் நடிப்பில் தற்போது தங்கலான் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை பா.இரஞ்சித் இயக்கி உள்ளார். இதில் நடிகர் விக்ரம் உடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா தான் இப்படத்தை தயாரித்து உள்ளார்.

கே.ஜி.எப் எனும் கோலார் தங்கவயலில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து தான் இப்படத்தை இயக்கி இருக்கிறார் பா.இரஞ்சித். இப்படத்திற்காக மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்துள்ள நடிகர் விக்ரம் சுமார் 30 கிலோ வரை உடல் எடையை குறைத்திருக்கிறார். தங்கலான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்த படக்குழு நடிகர் விக்ரமின் பிறந்தநாளான இன்று அதுகுறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் விக்ரமை அடித்து, மிதித்து சித்ரவதை செய்யும் காட்சிகள் இடம்பெற்று உள்ளது. தன் உடலை வறுத்திக் கொண்டு நடிகர் விக்ரம் நடித்துள்ளதை பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர்.

தங்கலான் மேக்கிங் வீடியோ பார்த்த பலரும், இப்படத்திற்காக விக்ரமுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என கூறி வருகின்றனர். அந்த அளவுக்கு கடினமாக அவர் உழைத்துள்ளது இந்த மேக்கிங் வீடியோவிலேயே தெரிகிறது. படம் ரிலீஸ் ஆன பின்னர் விக்ரமுக்கு பாராட்டுக்களும், விருதுகளும் குவியும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

Related News