இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையேயான கருத்து பரிமாற்றம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசுப்பொருளாகி இருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாக திரைத்துறையைச் சேர்ந்த சிலரும், இயக்குனர் அமீருக்கு ஆதரவாக பலரும் தங்களின் கருத்துக்களை
சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து இயக்குனர் ஞானவேல் ராஜா, அமீரிடம் வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த அறிக்கையை விமர்சித்து இயக்குனர் சசிகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது. அமீர் அண்ணன் ஞானவேல் ராஜா மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்ன?