நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் கோலாலம்பூரில் நடைபெற்றது.
ரசிகர்கள் அந்த பிரம்மாண்ட மேடையில் நடிகர் விஜய் வந்ததும் ரசிகர்கள் புகைப்படங்கள் எடுத்து விஜய் விஜய் என கத்தி அரங்கத்தையே அதிர வைத்தனர். புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த அரங்கில் 80,000 ஆயிரம் பேர் வரை வரலாம்.
விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டை காண 75,000க்கும் அதிகமானோர் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. ஒரு தமிழ் பட இசை வெளியீட்டு விழாவிற்கு இத்தனை பேர் பங்கு பெற்றது இதுவே முதன்முறை என்பதால் இந்நிகழ்ச்சி Malaysia Book Of Recordsசில் இடம் பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சி மேடையிலேயே விஜய்யிடம் சாதனைக்கான பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகன் படம் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகிறது. அதனைக் காண ரசிகர்களும் ஆவலாக உள்ளனர். எச். விளோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெட்ச், மமிதா பைஜு, பிரியாமணி என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார்.








